உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 108 பிண்டத்தில் அமையப் பெறாதபே ரெழிலை அண்டத்தில் வந்தபின் அடைவதற் கில்லை. நீருக்கு துரையும் நெல்லுக் குமியும் நிலவின் உருண்டையில் நீங்காக் களங்கமும் தாமரை மலருக்குத் தண்டிலே முட்களும் அமைந்திருப் பதனை அனைவரும் அறிவர்! வான்கவிந் திருக்கும் வையகந் தன்னில் ஏதேனும் ஒருகுறை இல்லாத பொருளிலை எனினும் அகலியை இதற்குவிதி விலக்காம்! எந்தக் குறையும் இல்லாத பொருளை ஆரிய மொழியில் அகல்யம்' என்பர். மந்திர முனிவரின் மையல் மனைவி அழகில் குறையே அற்றவள் ஆதலின் நகைமுகம் கொண்ட நங்கையே அகல்யா தேவியென் றழைக்க லாயினரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/111&oldid=926692" இலிருந்து மீள்விக்கப்பட்டது