உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஞ் சம் மாங்காய்ப்பால் உண்டு; வேறு மரங்களின் பாலு முண்டு தேங்காய்ப்பால் வீட்டி லுண்டு செயற்கைப்பால் கிடைக்கும் ஊரில் ஆங்காங்கே பசுப்பால் விற்கும் ஆயினும் விலைகொ டுத்து வாங்காப்பால் என்னும் தாய்ப்பால் மட்டுமே நாட்டில் பஞ்சம்! மஞ்சளும் உண்டு, முல்லை மலர்களும் எங்கு முண்டு வஞ்சியர் முகத்தில் இன்றோ மஞ்சளின் பூச்சைக் காணோம் அஞ்சுதல் அடக்கம் நாணம் அனைத்துமே நாட்டில் பஞ்சம! மிஞ்சிய தென்ன வென்றால் . விருப்பம்போல் நடப்ப தொன்றே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/118&oldid=926699" இலிருந்து மீள்விக்கப்பட்டது