உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்மழை உண்டா? முல்லை இளங்கொடி முட்டையும் இட்டது கண்ணா குயில், முட்டை யிடுமன்றி முல்லை யிடாதடி கண்ணே! அல்லி மலர்க்கொரு நல்ல கணவன்யார் கண்ணா குளிர் அம்புலி என்னும் அழகு நிலாவடி கண்ணே! பேய்மழை நேற்றிங்குப் பெய்து கெடுத்தது கண்ணா அடி பெய்மழை தானுண்டு பேய்மழை ஏதடி கண்ணே! வாய்மொழி குன்றி.டின் தாய்மொழிகுன்றுமோ கண்ணா அடி வாழைப் பழத்தைநாம் "வாளப் பள" மெனில் குன்றும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/119&oldid=926700" இலிருந்து மீள்விக்கப்பட்டது