உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 வன்னிய வீரன் அந்தகக் கவிஞரும் அரும்பெரும் புலவரும் செய்த நூற்களின் சிந்தனை உலவிட, வாடாத சான்றோர் வகுத்தநல் லறமும் பிழைபடாக் கற்பும் பின்படா வீரமும் கொண்டுபுகழ் கொண்டது தொண்டை நன்னாடு; ஆடிற்று நாடு சொல்லச் சொல்லத் தொடர்ந்தே பரவும் நல்ல புகழொடும் நடுங்காத் திறத்தொடும் இத்தொண்டை நாட்டினை இளந்திரையன் ஆண்டனன். மாலை வெண்குடை மன்னவன் மாண்டபின் மரபுமுறை கெடாமல் மற்றவர் ஆண்டனர். ஏற்றிய விளக்கில் எண்ணைப் குறைந்திடின் வளர்ந்த வெளிச்சம் வரவரக் குறைந்திடும் அதுபோல் பின்வந்தோர் ஆட்சி தளரவே பகையும் கொடிய பசியும் பிணியும் குறையாக் கவலையும் குறும்புக் கலகமும் அடிக்கடி தோன்றவே ஆடிற்று நாடு. வடபெருங் கல்லையும் மணிக்கடல் நீரையும் இத்தமிழ் நாட்டின் எல்லைக ளாக்கி, மொழியை ஒன்றாக்கி முடியைமூன் றாக்கி வீரம் முளைத்தமு வேந்தர் மரபிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/126&oldid=926707" இலிருந்து மீள்விக்கப்பட்டது