பக்கம்:தேன்மழை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 126 இரும்பைத் திருத்தி இயற்றிய வாளினால் அண்ணனும் தம்பியும் ஆற்றலைக் காட்டினர். வெட்டினர் தமிழர் வீழ்ந்தனர் ஆந்திரர். குருதி பருகிக் கொடுவாள் சிவந்தது. தலைகள் வீழ்ந்தன மறவர் தடத்தோள் மலைகள் சாய்ந்தன மாற்றார் கைவேல் இலைகள் உதிர்ந்தன உல்லாம் சிதைந்தன! பழுத்தசெங் கதிர்போய்ப் படுக்கும் மேற்றிசைக் கடற்கரை வழியே கைவேல் கீழ்விழக் கொங்கரை விரட்டிய கோமகன் ஆய்வேள் போன்று விரட்டினான் போர்வீர வன்னியன்! வன்னிய வீரனை அந்நிய ஆந்திரன் தியென ஓங்கும் தீராப் பகைவரைச் சூழ்ச்சியின் மூலம் தொலைக்கத் தொடங்கினான். புல்லுருவி முளைத்தது முதலி ஒருவன்; அந்த முதலியோ தேளொடு பாம்பொடு சேர்க்கத் தகுந்தவன் சதிசெய் வதிலே சகுனிபோல் சமர்த்தன் பார்புகழ் காந்தவ ராயனின் பகைவன். சுரீரென மாந்தரைச் சுடும்சுடர்ச் சூரியன் வகுத்த பகலும் வான்மீன் இரவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/129&oldid=926710" இலிருந்து மீள்விக்கப்பட்டது