உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 128 கொஞ்சும் வஞ்சகி குப்பாச்சி என்னும் வேசியைக் கொண்டுநாம் வீழ்த்தலாம் அவனை என்று கூறினன் இயற்கை வஞ்சகன். அன்னவன் செய்தியை மன்னவன் கேட்டு மகிழ்ச்சி யடைந்தான்! மலர்ச்சி யடைந்தான்! நின்ற முதலியை நிருபன் நோக்கி வாலிபம் கடந்த வயோதிக முதலியே நன்று நன்றுநின் நன்றியை என்றுமே மறவேன் யானென மகிழ்ந்து கூறி ஆறா யிரம்பொன் அவனிடம் நீட்டவே இழிந்தோன் இருகரம் ஏந்தி வாங்கினான். வாங்கிய பரிசொடு வீங்கிய நினைவொடு வேம்பு முதலி விடைபெற்றுச் சென்றனன். காட்டிக் கொடுத்த கயவன் சென்றதும் வெருகூரில் வாழ்ந்த வேசிகுப் பாச்சியை அழைத்துவர வேந்தன் ஆட்களை அனுப்பினான். ஆந்திர வேந்தனின் அரண்மனைக் காவலர் வெருகூர் நோக்கி விரைந்து சென்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/131&oldid=926712" இலிருந்து மீள்விக்கப்பட்டது