உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 வன்னிய வீரன் பஞ்சணைப் பறவை வேசி குப்பாச்சி யோர்விளம்பர விளக்கு பாவின் இனத்தைச் சேர்ந்த பரத்தை! ஐந்தும் ஐந்தும் ஐந்தினோ டாறெனச் செப்பும் வயதினள். செம்பொன் நிறத்தினள். பேசியே உருக்கும் பெருங்கலை வல்லி மதன வித்தார மாலையே அன்னவள் புதிய கொக்கோகப் புத்தக மாகும். சில்லேட்டும தேகம் அமைந்தவள் ஆதலின் கூந்தல் நீண்ட கோதையாய் விளங்கினாள் காம்பவிழந் துதிர்ந்த கனியுருக் கொண்டவள் குழைத்து முடியிடும் கொண்டைச் சொருக்கினால் இடையினால் நடையினால் இயந்திரப் பார்வைப் படையினால், கலப்படம் படிந்த சொல்லினால் பாதி உணர்ச்சியால், மீதி நடத்தையால் மாவீரன் காந்தனை மயக்கி வந்த பஞ்சணைப் பறவை வஞ்சக வாகனம்! ஆந்திர வேந்தனின் அரண்மனைக் காவலர் வெருகர் வந்து வேசியைக் கண்டு மன்னன் உரைத்ததை மாதுக் குரைத்தனர். அன்னவள் கேட்டனள் அரண்மனைக் கெழுந்தனள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/132&oldid=926713" இலிருந்து மீள்விக்கப்பட்டது