உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13i வன்னிய வீரன் இசையமு தளிக்கும் இளவேனிற் காலம் மையல் இரவு மலர்ந்தது மூவைந்து நாட்கள் ஏறிய நல்ல வெண்ணிலா வட்டம் நீல வானில் மிதந்தது! ஒப்பனைக் களஞ்சியம் குறைந்த சிற்றிடையும் நிறைந்தபே ரெழிலும் கொண்ட பரத்தை குப்பாச்சி என்பாள் ஐம்பாற் கூந்தலை ஒரு பாலாக்கியும் கோதி ழுடித்தே கோலமலர் குடியும் கையால் எழுதா வரியொடு வளர்ந்த பொய்யான விழிக்குப் புதியமை աւգպմ ஆய்ந்தளந் தியற்றிச் செய்தநல் லாடையை விரித்தே யுடுத்தும் மேனி மினுக்கியும் பருதி வட்டத்தைப் பழிக்குப் பதக்கம் இறுதிவரை கெடாதபே ரெழில்முத் தாரம் முதலாம் அணிகளை முறைகெடா தணிந்தும் கண்ணாடும் மங்கை கண்ணாடி பார்த்தனள். து.ாதுத் தோழிகள் குதுப் பரத்தையின் பாதச் சிலம்பினைப் பக்குவப் படுத்தினர். வெள்ளை நிலவு விழித்ததா? என்றே அன்னவள் கேட்டாள். ஆம் என்றாள் தோழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/134&oldid=926715" இலிருந்து மீள்விக்கப்பட்டது