உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 வன்னிய வீரன் அன்றோ? என்றான். அதுகேட்டுப் பொதுமகள் நாணம் காட்டி நகைமுகம் காட்டி அம்புப் பார்வையை அவன்மீது பாய்ச்சினாள். ஆரந் தாழ்ந்த அணிகிளர் மார்பும் தாள்நோய் தடக்கையும் தறுகண் ஆண்மையும் முற்றிய புகழும் முதிரா இளமையும் பெற்றுத் தனித்திறன் பெற்று விளங்கிய விசயா லயசோழ வேந்தன் என்பான் வேரொடு பகைவரை வீழ்த்திய நாளில் அங்கத்தில் தொண்ணுற் றாறுபுண் பெற்றனன். அன்னவன் போன்றே தொண்ணுரற் றாறு விழுப்புண் பெற்று விளங்கிய காந்தவன் பொய்விழிப் பரத்தையின் போர்விழி பாய்ந்ததால் பழிப்புக் குரியபுண் பலநூறு பெற்றனன்! பால்வகை தெரிந்த பரத்தையோ மீண்டும் கொடுவாள் வீரனைக் கூர்ந்து நோக்கிக் கொப்புளம் கொண்ட குளிர்வானில் மிதக்கும் இந்த வெண்ணிலா ஏன்புகை கின்றது? கூறுவீர் என்று குழைந்து கேட்டனள். திப்புத்தோள் வீரன் சிறுநகை செய்தே, என்னடி பெண்ணே ஈர வெண்ணிலா புகைகின்ற தென்றுநீ புதிர்போடு கின்றனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/138&oldid=926719" இலிருந்து மீள்விக்கப்பட்டது