உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை , 136 அமுதுகுல் கொண்டநல் லழகு வெண்ணிலா வட்டத்தில் புவிநிழல் வந்து படிவதால் புகைதல் போன்று புலப்படு கின்றது கோதையே! என்று கூறினன் வீரன். அவனை மயக்கினால் அதிகம் கிடைக்கும் இவனை இழுத்தால் ஏராளம் பெறலாம் விழிவலை விரித்தால் வீழ்ந்திடு வானிவன் என்னும் கருத்தை இதயத்தில் வைத்தே கணிக்கக் கூடிய கணிகை அதுகேட்டு மொட்டுப் புன்னகை முகத்திற் காட்டினாள். மோது காமத்தில் மூழ்கி வந்தவன் குதுப் பரத்தையின் தோள்தொட நெருங்கவே ஊடினாள் சற்றே ஒதுங்கினாள் உலாமகள்! தொடங்கிற்று நாடகம் வாள்தொட்டுப் பயின்று வந்தோன் பரத்தையின் தோள்தொட்டுப் பயிலத் தொடங்கும் வேளையில் அவிழ்ந்தவெண் தாழைபோல் அவளுடை அவிழ்ந்தது சித்திரக் கன்னம் சிவந்தது வாயிதழ் பெற்றசெந் நிறமோ பெயர்ந்தது வேறிடம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/139&oldid=926720" இலிருந்து மீள்விக்கப்பட்டது