உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவையைப் பார்த்தீரோ? அழகிற் சிறந்திருப்பாள்-குலமகள் அன்னம் எனநடப்பாள் தழுவுங் கொடியிடையாள்-திருவளர் தாமரை போன்றிருப்பாள்! விழியில் நிலாவளர்ப்பாள்-சுரையின் விதையது போல்நகைப்பாள் மழையின் குளிரமுதை-மதுமலர் மங்கையைக் கண்டீரோ? மஞ்சள் குளித்திருப்பாள்-விழிதனில் மையிட்டுக் கொண்டிருப்பாள் கொஞ்சம் மலர்பறித்தே-இருள்தரும் கூந்தலில் சேர்த்திருப்பாள் நெஞ்சைக் கவர்ந்திழுக்கும்-திலகமும் நேரிழை வைத்திருப்பாள் வஞ்சி நகரெனவேசிறந்தபெண் வஞ்சியைக் கண்டிரோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/146&oldid=926727" இலிருந்து மீள்விக்கப்பட்டது