உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண் சிவந்ததேன்? தோழி எண்ணவும் எழுதவும் இலைதனைக் கிள்ளவும் வண்ண மலர்களை வகைபெறத் தொடுக்கவும் இன்னிசை யாழினை எடுத்து மீட்டவும் அறிந்த மங்கையே அழகின் தங்கையே விடுபடா அம்பு, விழிபெற்ற மாதே கொடிபடு கிழங்குக் கொண்டைஏன் அவிழ்ந்தது? தலைவி சஞ்சீவி பர்வதச் சாரலின் ஒரம் விரிந்த விரலென விளங்குசெங் காந்தள் கொத்து மலரைநான் குனிந்து பறிக்கையில் 'இளி யெனும் ஓசை எழுப்பும் வண்டுகள் குறும்பு செய்ததால் கொண்டை அவிழ்ந்தது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/150&oldid=926731" இலிருந்து மீள்விக்கப்பட்டது