உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 கண் சிவந்ததேன்? தலைவி வான்கண் விழியா வைகைறப் பொழுதில் செவ்வாய் கருங்கண் வெண்ணகைப் பெண்டிரொடு மூச்சுநனை யாமலும் பேச்சுநனை யாமாலும் குளிர்ந்த தாமரைக் குளத்தில்நீ ராடினேன். சேல்விழி அதனால் சிவந்துபோய் விட்டது ! தோழி முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை இனியவ் வழக்கம் ஏற்பதற் கில்லை காக்கை பாடினியின் பெயர்நச் செள்ளை என்றெனக் குணர்த்திய ஈர நிலவே' கன்னி அன்னமே! கல்வி அமுதமே ! உன்கை வளையல் உடைந்ததேன் கூறுக ! தலைவி மணிக்குயில் கூவி மகிழ்ந்திடும் சோலையில் ஆசைத் தென்றல் அசைந்திடும் மாலையில் பந்து விளையாடிப் பழகினோம்; ஆங்கோர் பாவை எறிந்தபூப் பந்து பட்டதால், வளையல் உடைந்தது மாங்கனி மங்கையே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/152&oldid=926733" இலிருந்து மீள்விக்கப்பட்டது