உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 150 தோழி வாய்மொழி வளர்ந்தால் தாய்மொழி வளரும் தாய்மொழி தேய்ந்தால் தன்மானம் தேயும் நோய்கொண் டாலும் கொளலாம் மதமெனும் பேய்கொளல் தீதெனப் பேசி விளக்கும் சிந்தனைச் செல்வியே! செந்தமிழ்க் கிளியே! இந்தப் பற்குறி எவ்வாறு வந்தது? தலைவி சித்திரக் கிளிக்கொரு முத்தம் கொடுத்தேன் பச்சைக் கிளியோ பவளவாய் இதழ்களைக் கொழுத்துப் பழுத்த கோவைக் கனியென எண்ணிக் கொண்டென் இதழ்களைப் புண்ணாக்கி விட்டது பூங்கொடி வஞ்சியே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/153&oldid=926734" இலிருந்து மீள்விக்கப்பட்டது