பக்கம்:தேன்மழை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொய்யாக் கனி (கும்மி) வெள்ளிக் கிழமை பிறந்தவளாம்.அவள் வேலிப் பருத்தியைப் போன்றவளாம் பள்ளக் கடலவள் பார்வைகளாம்-புதுப் பங்கயப் பூக்களே செங்கைகளாம் பெய்யும் மழைபோற் குளிர்ந்தவளாம்-அவள் பிச்சி மலர்போற் சிறந்தவளாம் நெய்யின் நிறத்தினைப் போன்றவளாம்-அவள் நெற்கதிர் நாணம் உடையவளாம் ! துய்ய தமிழ்க்கவி செய்பவளாம்-அவள் தொட்டால் சுடாதவோர் செந்தனலாம் கொய்யும் தளிரது போன்றவளாம்-அவள் கொய்யாக் கணியாய் இருப்பவளாம் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/154&oldid=926735" இலிருந்து மீள்விக்கப்பட்டது