உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 நாடகப் பத்தினி உண்ணும் விடுதியிலே-அமர்ந்துநான் உண்ணும் பொழுதினிலே வண்ணப் பறவையெனை-விடுதியை வைத்தவர் தீண்டுகின்றார் ! அவர்க்கொரு தோட்டமுண்டு-தனிமையில் அங்குநான் செல்வதுண்டு சுவைத்திடும் ஆசைகொண்டு-கலந்தபின் துரங்கவோர் கட்டிலுண்டு ! சின்னஞ் சிறுகிளியே-உலகமிச் செய்தி அறிந்துவிடின் என்னைப் பழித்திடுமோ-இழிமொழி எல்லாம் உனக்கலவோ ? (ஆயிரம் ஆண்டுகட்கு முன் இயற்றிய கொரிய நாட்டுக் கவிதையின் தமிழாக்கம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/160&oldid=926741" இலிருந்து மீள்விக்கப்பட்டது