உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புய நானூறு இரவு நேரம் மணியோ ஏழரை நிமிராத பிறைநிலா நீந்திற்று வானில் இழைவிளக்கு வீட்டில் இமைத்துக்கொண் டிருந்தது. எண்ணெய் விளக்கும் இயற்கை விளக்கும் இருட்டை விழுங்கிக்கொண் டிருந்த வேளையில் புறநானூற்றைப் புரட்டிக்கொண் டிருந்தேன். "நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக் கடிய கூறும் வேந்தே தந்தையும் நெடிய வல்லது பணிந்துமொழி LఖGa இஃதிவர் படிவ மாயின் வையெயிற் றரிமதர் மழைக்க ணம்மா வரிவை மரம்படு சிறுதீப் போல அணங்கா யினடான் பிறந்த ஆர்க்கே" என்னும் பாடல் என்னைக் கவர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/168&oldid=926749" இலிருந்து மீள்விக்கப்பட்டது