உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை + 66 பண்டைக் காலத்துப் பகைவர் கரங்களில் இருந்தவேல் நுதிவேல் இரும்புக் கூர்வேல் இன்றைய நாட்களில் எல்லாம் தங்கவேல் iர மில்லாத விலைவேல் iண்வேல் என்னுமோர் எண்ணம் இதயத் தெழுந்தது. என்மகன் கல்லாடன் என்பான் வந்தே பெரும்போர் நூலின் பெயரைக் கேட்டனன். "புறநானூ றிதன்பெயர் புரிந்துகொள்” என்றேன். "புயநா னுறா" என்றான் புதல்வன். இவ்வாறு சொல்லவே என்மகன் சொல்லிய புயநா னுரறெனும் புதியசொல் பற்றி ஆராயத் தொடங்கினேன் ஆழ்ந்துசிந் தித்தேன். விழிகளும் புயங்களும் வீரத்தைக் காட்டிடும் உறுப்புக்கள் ஆதலின் ஓங்குபுகழ் நூலாம் புறநானூற்றைப் புயநா னுாறெனக் கூறுவ தாலே குற்ற மில்லை என்னும் முடிவோ டெழுந்தேன் எழுந்து மழலைப் புலவனை, விளையா மழலைப் புதல்வனை வாரியணைத் தேனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/169&oldid=926750" இலிருந்து மீள்விக்கப்பட்டது