உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 சங்கிலித் திருடன் அந்த நாள்முதல் இந்த நாள்வரைத் துன்ப உலகின் தொடர்கதை யாகும். அந்தக் கதைக்கோர் அங்கம் வகித்தவன் சிங்கப்பூர் நகரின் சங்கிலித் திருடன். இரவையும் பகலையும் இணைத்துப் பொருத்தும் பொழுதினை அந்திப் பொழுதென்று கூறுவர்! அன்றொரு நாள்செவ் வந்திப் பொழுதினில் செல்வம் கொழிக்கும் சிங்கப்பூர் நகரில் ஒவியப் பெண்களும் ஆண்களும் உலவினர். இருண்ட மீசையும் சுருண்ட முடியும் சேலின் விழியெனச் சிவந்த விழிகளும் கொண்டோ னாகிய குள்ளத் திருடன் களவு செய்யும் கருத்தொடு நடந்தான். அந்தி மாலையில் அந்நகர்ப் புறத்திலே குட்டி முதலையைக் குள்ளன் திருடி ஆட்க ளிடத்தில் அகப்பட்டுக் கொண்டான். நீரில் கிடந்த நீண்ட முதலையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/172&oldid=926753" இலிருந்து மீள்விக்கப்பட்டது