உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை + 76 பின்துங்கி முன்னரெழும் வண்ணப் பெண்ணே! பேரறிஞன் ரூசோவின் புத்த கத்தை அன்றோர்நாள் நான்படித்துக் கொண் டிருந்தேன் அப்போது நீ யென்னைக் காண வந்தாய் தென்னாட்டு முத்தெனவே நகைத்து நின்றாய். சித்திரமே நான்தொட்டேன் ஒட்டிக் கொண்டாய். உன்பார்வை என்பார்வை இரண்டும் பேச உடனேநாம் இருட்டறையில் எச்சி லானோம். முதல்மனைவி நீயெனக்கு நானு னக்கு முதலிரவுக் காதலனாய் வாய்க்க வில்லை. புதுமதுவும் நீயன்று வண்டு கிண்டாப் புதுமலரும் நீயன்று மாதே உன்றன் சதையிதழ்கள் கண்ணாடிக் கன்னம் ஆசை தருகின்ற மதிவதனம் இவற்றுள் இங்கே எதுபுதிது? நாடோறும் நீயும் நானும் இட்டுவந்த முத்தமன்றோ புதிது பெண்ணே! கொடிகொடுத்த மலர்மாதே கோடை கண்டு கூவுகின்ற பூங்குயிலே மாற்றான். நாட்டில் படைநடத்தும் என்பார்வை பகைவர் மிதும் பாசறையின் மீதினிலும் இருத்தல் போலே உடையுடுத்தத் தெரியாத மைந்தன் பார்வை உன்மீதும் உன்பார்வை கட்டில் மீதும் இடைதடுத்துநிறுத்தாமல் வளர்த்த நெஞ்சம் என்மீதும் இருக்குமென்ப தறிவேன் மாதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/179&oldid=926760" இலிருந்து மீள்விக்கப்பட்டது