உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 நெப்போலியன் நினைக்கின்றான் முன்னழகும் பின்னழகும் முகத்தின் வாசல் முத்தழகும் மூக்குமல ரழகும்; வெள்ளை அன்னமிடும் நடையழகும் காட்டிக் காட்டி அன்றாடம் கொடியிடையை ஆட்டி ஆட்டிக் கன்னமெனும் கனிகளிலே கனிவு காட்டிக் கண்களினால் காதலுக்குப் பாதை காட்டிப் பொன்னுருவை நின்னுருவில் காட்டி என்னைப் பூரிக்க வைத்தவளே இதனைக் கேளாய். இடியரசன் யானென்றே வீரம் பேசி எனையெயதிர்த்தான் ஆஸ்திரியன். பின்னர் அந்த முடியரசன் சந்தித்தான் ஒருநாள். பேசி முடிவெடுத்தோம் ஒப்பந்தம் செய்துகொண்டோம் மடிமலரே ஆஸ்திரிய நாட்டு மன்னன் மகளான மேரியைநான் மணந்து கொண்டால் நெடுங்கடலைத் தரையெனவே நினைக்கும் இந்த நெப்போலி யன்திட்டம் புகழை யெட்டும்! உருவத்தாற் சிறந்தவளே! என்றன் நெஞ்சில் உலாவிவரும் எண்ணமெனும் பெண்ணே கண்ணே! பருவத்தால் பழுத்தவள்நீ! ஆனால் அந்தப் பட்டாடைக் கட்டழகி நெஞ்சில் ஏறும் கருவத்தால் பழுத்தவளே ஆவாள். அந்தக் காரிகையை நான்காம்நாள் மறுத்தே னாயின் இருபத்து நான்காம்நாள் நின்ற சண்டை இனிதொடரும் என்பதனால் ஏற்றுக் கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/180&oldid=926761" இலிருந்து மீள்விக்கப்பட்டது