பக்கம்:தேன்மழை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 182 திருவோங்கும் தலைநகரில் அமைதி யில்லை, சிறப்போநற் பூசனையோ நிகழ வில்லை. வரிவேங்கைப் புலிவலிமைப் பகைவர் தம்மால் வருங்காலம் என்னாமோ என்றே அஞ்சி நடைசேர்ந்த முதியோரும் தொங்கும் தாலி நங்கையரும் மங்கையரும் இளஞ்சி றாரும்; உரல்சேர்ந்த புதுச்செந்நெல் போலும், பாலின் உள்ளுறையாம் தயிர்போலும் அடங்கி யுள்ளார். தாய்கொண்ட பேரன்பு காட்டு கின்ற தமிழ்மக்கள் ஆதரவைப் பெற்ற யானோ நோய்கொண்டு கிடக்கின்றேன் படுக்கை மீது! நொய்கண்டு, கோழியதைக் கொத்து தற்கு வாய்கொண்டு வருவதுபோல் மதுரை மூதுர் வாசலுக்கு வருகின்றார் பகைவர், யானோ பாய்கொண்ட காரணத்தால் போர்வா ளேந்திப் படைமுகத்தில் நின்றிடவோ இயல வில்லை! மனவலிமை இருந்தாலும் ஒர்நாட் டுக்கு மற்றபல வலிமைகளும் இருத்தல் வேண்டும், வினைவலிமை படையெடுக்கும் பகைவர் நாட்டின் வேல்வலிமை வாள்வலிமை தனக்கே யுள்ள தனிவலிமை துணைவலிமை இவற்றை யெல்லாம் தக்கபடி சீர்தூக்கிப் பார்க்கும் போதில் இனியவரே தங்கள்துணை இருந்தா லன்றி எதிரிகளை முறியடித்தல் கடின மாகும் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/185&oldid=926766" இலிருந்து மீள்விக்கப்பட்டது