உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 படை வேண்டும் பொழிப்பகலம் புதுநுட்பம் எச்சம் நான்கும் பொருந்தியதோர் உரைநூற்போல்; சிறந்த சேனை விழித்தெழுந்து மாமதுரை நகரைத் தாக்கும் வேளையில்நீர் உதவிசெய வேண்டும். இன்றேல் செழித்தெழுந்த சோலைகளும் மலையும் காடும் சேர்ந்தெழுந்து விளங்குகின்ற மதுரை மூதூர் இழுத்தெறிந்த பொருள்போலாம்! எங்கள் ஆட்சி இசைநுணுக்கம் எனும் நூற்போல் மறைந்தே போகும். உன்னமெனும் மரத்திலுள்ள இலைகள் வாடி உதிருமெனில்; போர்புரியச் சென்றி ருக்கும் மன்னவனின் படைதோற்கும் என்பர். அந்த மரம்பூத்தால் அவன்படையே வெல்லு மென்பர். இன்றுவரை சங்குள்ள உன்னம் என்னும் இலவமரம் வாடவில்லை. எனினும் அந்தக் கன்னடரை முறியடித்து வெல்ல வேண்டிக் கட்டாயம் உதவிசெய வேண்டு கின்றேன். இப்படிக்கு, திருமலைநாயக்கன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/186&oldid=926767" இலிருந்து மீள்விக்கப்பட்டது