உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழைப்பூ வேதாந்தம் பெருங்கீர்த்தி பெற்றஷெல்லி பிறந்த நாட்டில் பிறந்தவரே! லார்டுபெண்டிங் துரையே! நாட்டின் வருங்காலம் அறிந்தவரே! வணக்கம்! சொல்லில் வல்லவரே நல்லவரே வணக்கம் உள்ளம் திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார். எனவே அன்பே உருவான பெண்டிரெலாம் அடிமை யாகி உறைக்கிணறு செய்கின்றார் கண்ணி ராலே! உயிலெழுதி வைத்துவிட்டுக் காசி என்னும் ஊருக்குச் செல்லுமிவர், காட்டி லாடும் மயிலழகைப் பார்ப்பதில்லை; அறிவு மிக்கோர் வரலாற்றைப் படிப்பதில்லை; சுடரைக் கொண்டு வெயிலெழுதும் வானத்தை மதிப்ப தில்லை; வேல்வளர்க்கும் வீரத்தைப் புகழ்வ தில்லை; கயவர்களின் பதர்க்கதையாம் புராண மென்றால் காதாரக் கேட்கின்றார் போற்று கின்றார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/187&oldid=926768" இலிருந்து மீள்விக்கப்பட்டது