உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                                            முகில்
                                     (கானல் வரி சந்தம்)


கடலுடல் தொடுபவளே

     கருவொடு வருபவளே 

நெடுமலை துயில்பவளே

     நிதிதரு மலைமகளே 

இடையிடை யிடியுடனே

     இருள்நிற எழிலுடனே

கொடுவெயில் துயர்கெடவே.

     குளிரொடு வந்தனையே!





குணகடல் படிந்தொழும்நீ

     கழல்நிறம் பெறவிலையேல் 

அணிமயில் அகவிடுமோ

    அதுபுது நடமிடுமோ 

மணிமலர் நகைதருமோ

    மதுகரம் இசைதருமோ 

தணல்தரை குளிர்ந்திடுமோ

    தமிழ்நிலம் சீர்பெறுமோ?
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/19&oldid=495470" இலிருந்து மீள்விக்கப்பட்டது