உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதாவின் தேன்மழை

18



விரல்நிகர் அரும்பதுவோ

     விரிந்தது நெருப்பெனவே 

கருவிளை மலர்ந்ததுவே

     கருநிற விழியெனவே 

ஒருமகள் இடையெனவே

     ஒருகொடி யசைந்ததுவே 

உருள்நடை ரதமெனவே

     உயர்மரம் பூத்ததுவே!





அழகுவில் வளைந்தனையே

     அவனிடங் கணையிலையே 

முழுமழை பொழிமுகிலே

     முதலிதை மறந்தனையே 

தழுவிய நிலையதனால்

      தனியுடை நழுவியதோ 

இழிநிலை இதுவலவோ

      இருள்நிற வான்முகிலே!






எழுவதுன் செயலலவோ

     விழுவதுன் துளியலவோ 

பொழிவதுன் செயலலவோ

    புனைவதென் தொழிலலவோ 

அழகிய சுழிகுளமே

    அதன்புனல் மழைவளமே 

உழவரின் அருந்தனமே

    உனக்கொரு வந்தனமே!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/20&oldid=495469" இலிருந்து மீள்விக்கப்பட்டது