உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

487 வாழைப்பூ வேதாந்தம் உருவமிலாக் கடவுளுக்கேன் உருவம்? இங்கே உளிகொண்டு செய்கின்ற சிலையோ தெய்வம்? இருவிழிபோல் மிகச்சிறந்த மாதர் தம்மை ஏன்இழிவாய்ப் பேசுகின்றீர்? ೭6ುಕು போற்றும் அரியசெயல் செய்யுங்கள், iனில் ஏனோ அருச்சனைகள் செய்கின்றீர்? என்று கேட்கும் பெரியதொரு சீர்திருத்தச் சங்கம் வைத்துப் 'பிரமசமா சம்' நடத்தி வருகின் றேன்யான். பெற்றோரால் மூன்றுமுறை விரட்டப் பட்டேன் பித்தர்களால் கங்கையில்நான் தள்ளப் பட்டேன் கற்கால நெஞ்சத்தார் விட்டெ றிந்த கற்களினால் ஒர்நாள்நான் தாக்கப் பட்டேன் முற்றாத சிறுவயதில் திபேத்து நாட்டில் முட்டைமணத் தோனொருவன் வெட்ட வந்தான் சிற்றாடைப் பெண்ணொருத்தி உதவி செய்ய திபேத்தில்தான் உயிர்தப்பி வங்கம் வந்தேன். கன்பூஷ்யஸ் என்பவனோர் சீன ஞானி கற்றறிந்த மாமேதை உலகம் போற்றும் அன்பாளன் அவன் தந்தை ஹஅலி யாங்ஹை அவனுயரம் பத்தடியாம்! சென்ற திங்கள் முன்போபத் தோடென்னை வெட்ட வந்த முட்டாளும் அவனுயரம் இருப்பான் கல்வி முன்னேற்ற மில்லாதார் வைத்தி ருக்கும் மூலதனம் வேறென்ன கோபந் தானே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/190&oldid=926771" இலிருந்து மீள்விக்கப்பட்டது