பக்கம்:தேன்மழை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 188 கோபத்தில் உருவாகும் நிறமே என்னைக் குறைகூறும் அனைவர்க்கும் அந்தி வானம்! தீபத்தால் விடுபற்றி எரியு மன்றித் தீட்டியதோர் ஒவியம்போல் விளங்கும் வீடு சாபத்தால் எரிவதில்லை என்று ரைத்தேன். தற்குறிகள் தாக்கவந்தார். அறிஞர்க் கெல்லாம் ஆபத்தே ஆகாரம் துன்பம் ஒன்றே அவர்க்கிந்த உலகுதரும் பரிசு போலும்! பேர்வாய்ந்த போர்வேந்தன் சந்த்ர குப்தன் பிறராலே தீங்குவரும் என்றே அஞ்சி ஒர்நாளைக் கோரிடத்தில் உறங்கு வானாம்! உண்மையிலே என்நிலையும் இதுதான். ஆணி வேர்போன்ற பஞ்சாங்கப் பகைவர் தீமை விளைவிக்கக் கூடுமெனக் கருதி நல்ல கூர்வாய்ந்த கத்தியொன்றை மடியில் வைத்துக் கொண்டுள்ளேன் நானென்னைக் காத்துக் கொள்ள. வடந்தொட்டுத் தேரிழுக்கும் இந்தி யாவின் மனக்கோணல் அறிந்தவரே! வைசி ராயே! புடம்பட்ட பசும்பொன்னைப் போன்ற பெண்கள் பூவோடும் பொட்டோடும் மஞ்ச ளோடும் உடன்கட்டை ஏறிவரும் வழக்க மிங்கே உண்டென்ப தறிவீர்நீர் ஆய்ந்து பார்த்தால் முடம்பட்ட நெஞ்சத்தார் புகுத்தி விட்ட முழுமூடத் தனமென்ற முடிவே தோன்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/191&oldid=926772" இலிருந்து மீள்விக்கப்பட்டது