பக்கம்:தேன்மழை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 190 சொந்தமொழி யாம்வங்கம் அரபி கிரேக்கம் சுவைசொட்டும் மராட்டிமொழி இனிக்கும் ஈப்ரு இந்தி வட மொழி சிறந்த லத்தீன் பார்சி இவற்றொடுநான் ஆங்கிலமும் அறிவேன். பெண்கள் சந்ததியை இவ்வாறு தீயில் தள்ளும் சம்பவத்தைப் பிறர்நூலில் படித்த தில்லை! மந்திரங்கள் முணுமுணுக்கும் இந்தி யாவில் மட்டுந்தான் இக்கொடிய வழக்க முண்டு! பெருந்துன்பம் தருகின்ற தீயில் விழும் பேதையரே கேளுங்கள் ! உங்கள் வாழ்வை விருந்தென்று கருதுங்கள் செயற்கைச் சாவை விரும்புவதால் புதுநன்மை பெறவே மாட்டீர்! மரங்கொண்ட கனியொன்று வீழ்ந்த தென்று - மரக்கிளையோ அம்மரமோ வீழ்வ துண்டோ? திருந்துங்கள் என்றாலும் கேட்ப தில்லை திருத்துகின்றோம் என்றாலும் விடுவ தில்லை. சித்திரப்பெண் பத்தினியும் காஷ்மீ ரத்தில் சிற்சிலரும் செஞ்சியிலோர் புதுமைப் பெண்ணும் கத்துகடல் முத்தரசன் ராச ராசன் காலத்து மங்கையரும் 8ിൽ துங்கிச் செத்ததைநாம் வரலாற்றில் அறிவோம், அன்னார் தேன்வாழ்வை ஏன்கெடுத்துக் கொண்டா ரென்றால் பத்தினிமார் உடன்கட்டை ஏறிச் செத்தால் பரலோகம் கிட்டிடுமாம் எனவே செத்தார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/193&oldid=926774" இலிருந்து மீள்விக்கப்பட்டது