பக்கம்:தேன்மழை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 வாழைப்பூ வேதாந்தம் குன்றெறிந்த நெடுந்தோளான் விரிந்த வட்டக் குடைநிழலில் வீற்றரசு செய்த ஹர்ஷன் என்பவனை ஈன்றெடுத்த மங்கை, மன்னன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி னாளாம் தென்திசையைப் பொன்திசையாய் மாற்றி வீரத் திறங்காட்டி அரசாண்ட பூதப் பாண்டி மன்னவனின் பொன்மனைவி தீயில் வெந்து மாண்டாளாம் மாமன்னன் மாண்டான் என்றே ! எதுவரையில் வானத்திற் கெல்லை யுண்டோ எங்கெங்கு வாய்ப்பேச்சு வழக்க முண்டோ அதுவரையில் அங்கங்கே சிறந்து நிற்போன் அசோகனென்பான் அரசாண்ட நாளில் ஆமை முதுகெனவே நெடுஞ்சாலை அமைத்தான். மக்கள் முன்னேறக் கலைக்கூடம் கட்டி வைத்தான் புதுமைப்ல செய்திட்டான், எனினும் இந்தப் பொய்மரண வழக்கத்தை ஒழித்தா னில்லை. தசரதன்தான் தடுத்தானா? கேடு கெட்ட தத்துவத்தை இராமன்தான் தடுத்திட் டானா? அசைவறியா வீரத்தால் விவேகத் தாலே அரசாண்ட மூவேந்தர் தடுத்த துண்டா? பசையறியாக் கற்களினால் சிலைகள் செய்த பல்லவர்க்கோ கன்னடர்க்கோ தெலுங்கு பேசும் விசயநகர் வேந்தர்க்கோ கீதை தந்த விட்டுணுக்கோ தீமையென்று பட்ட துண்டோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/194&oldid=926775" இலிருந்து மீள்விக்கப்பட்டது