பக்கம்:தேன்மழை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொங்கல் சிந்திய பனியும் நம்மைத் தீண்டிய குளிரும் குன்றி முந்தைய பருவ மாகி முடிந்தபின், மற்றோர் மாற்றம் தந்தது நீல வானம்! தமிழரை ஒன்று சேர்க்க வந்தது புதிய திங்கள்! வந்தது நமக்குப் பொங்கல்! தக்கவர் எழுத்தும் பேச்சும் தாய்மொழிப் பொங்க லாகும். மக்களின் உழைப்பில் தோன்றும் மனைவிழா உணவுப் பொங்கல். சர்க்கரை புகுந்த பொங்கல் சரித்திரம்; தமிழர்க் கெல்லாம் சிக்கனச் சொற்கள் சேர்ந்த செய்யுள்போற் சிறந்த தாகும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/200&oldid=926781" இலிருந்து மீள்விக்கப்பட்டது