பக்கம்:தேன்மழை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெருப்பு நாடகம் செங்கோடன் என்நண்பன்; அவனும் நானும் திருவீழி மிழலைசென்று திரும்ப லானோம். எங்கேயோ இருந்தபடி ஒருவன் பாட என்நண்பன் மிதந்துவந்த இசையைக் கேட்டுத் தங்கால்பொற் கொல்லனென்பான் வடித்து வைத்த தமிழ்ப்பாட்டை வாய்விட்டுப் பாட லானான். அங்கே.பார் வான்மீதோர் கனியை என்றேன். அக்கணிதான் நமக்கினியக் கனியென் றிட்டான். வீதியினைச் சூடாக்கி மாந்தர் மீது வெப்பத்தைத் துப்பவந்த கொடிய கோடை ஆதிமுகம் இவ்வுலகில் குற்ற வாளி! அன்றிருந்த திருவாத ஆரர் தம்மை வீதியிலே நிற்கவைத்துச் சுட்ட தன்றோ? விழாநகராம் மதுரையிலே வாட்டிற் றன்றோ? சாதிமதம் நமைச்சுடுதல் போதா தென்று தாமரைப்பூ நாயகனும் சுடவந் திட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/201&oldid=926782" இலிருந்து மீள்விக்கப்பட்டது