உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழாத விழாக்கள் மாந்தரெலாம் ஆங்காங்கே ஒன்று கூடி மகிழ்ந்துசெயும் செயல்யாவும் விழாக்க ளாகும். ஏந்துபுகழ் மூவேந்தர் வாழ்ந்த நாளில் எடுத்தவிழா பலவாகும். இன்றோ மக்கள் சாய்ந்தமனம் கொண்டிருக்கும் கார ணத்தால் சத்தற்ற விழாக்களினால் பாழா கின்றார். தேய்ந்தகதை அதற்காக விழாக்கள்! ஊரில் தேரோட்டம்! வியாபார ஒசைக் கூட்டம் ஆட்டனத்தி என்பான்போல் ஆடு வோர்க்கும் ஆறுமுக நாவலர்போல் பேசு வோர்க்கும் பாட்டரசன் கம்பனைப்போல் பாடு வோர்க்கும் பறம்புமலைப் பாரியைப்போல் வழங்கு வோர்க்கும் நாட்டினர்க்கு நல்வழியைக் காட்டு வோர்க்கும் நாமுண்ணும் சோற்றுக்கும் படுத்து றங்க வீட்டினிலே பழம்பாய்க்கும் பஞ்ச முண்டு! விழாக்களுக்குத் தமிழ்நாட்டில் பஞ்ச மில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/203&oldid=926784" இலிருந்து மீள்விக்கப்பட்டது