உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201 விழாத விழாக்கள் உறையூரில் நடைபெற்ற தாகக் கூறும் 'உள்ளி விழா இன்றுநடைபெறுவ தில்லை. பிறையேறும் வானத்தில் ஊர்தி ஏற்றிப் பெருஞ்செயல்கள் புரிந்துவரும் இந்த நாளில் முறைமீறி விட்டவிழா வீழ்ந்த தென்று முணுமுணுத்துப் பயனில்லை. மாந்தர்க் கின்று குறைசேரா நல்லவிழா வேண்டு மன்றிக் கும்பாபி டேகவிழா தேவை யில்லை. தங்கத்தில் குறையிருந்தால் ஒப்பு வோமா? சந்தனத்தில் சேறிருந்தால் பூசு வோமா? மங்கிக்கொண் டேயிருக்கும் மதங்கள் கூறும் மெளடீக விழாக்களை நாம் நடத்த லாமா? சிங்கத்தை வளர்க்காமல் காட்டில் மேயும் சிறுமுயலை வளர்ப்பதனால் பெருமை உண்டா? வங்கத்து ஞானிக்குச் சிலைகள் இங்கே! வடலூரார் போன்றோர்க்குச் சிலைகள் எங்கே? பனங்கிழங்கை நாரையின்வாய்க் குவமை கூறிப் பரிசுபெற்ற பாவலனை நினைக்கின் றோமா? தினந்தினம்போய்ப் பலரிடத்தில் கேட்டு வாங்கிச் சேகரித்துத் தனிப்பாடல் நூல்தந் தோனை நினைந்திடுவார். யாரிங்கே? அவர்கட் கெல்லாம் நிலையான அடையாளச் சின்னம் உண்டா? மனங்குவிந்த தமிழர்களே அறிஞர் பா. வே. மாணிக்க நாயகர்க்குச் சிலைவேண் டாமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/204&oldid=926785" இலிருந்து மீள்விக்கப்பட்டது