உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 உ. வே. சாமிநாதையர் பழங்காலச் சுவடி தேடும் பணியிலே ஈடு பட்டு விழுங்காலம் வரும்வ ரைக்கும் வேதியர் தொண்டு செய்தார். செழுங்காந்தள் மலரைப் போன்று சிவந்தவர் செய்த தொண்டோ ஒழுங்கான தொண்டு; கல்வி உலகமே போற்றும் தொண்டு. நாமெலாம் பத்துப் பாட்டை நன்னூலைப் பார்க்கின் றோமே ஒமநா தைய ரோஅவ் ஒலையை அச்சி லிட்டார்? பூமிபோற் பொறுமை கொண்ட புலவராம் இவரே இட்டார். சாமிநா தைய ரின்றேல் சங்கநூல் மறைந் திருக்கும்! ஆயிரம் பிறைகள் கண்டார் ஆணிப்பொன் ஐயர், பெற்ற தாயினும் சிறந்த தான தமிழுக்கே தம்மை சந்தார். துயநூற் சுவடி தந்த தூயவர், பாடல் பெற்ற கோயில்போ லானார், தஞ்சைக் கோபுரக் கலச மானார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/212&oldid=926793" இலிருந்து மீள்விக்கப்பட்டது