பக்கம்:தேன்மழை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 2+2 பாடினார் கோவை, துது பாடினார், கலம்ப கங்கள் பாடினார்; உலாநூல் ஒன்று பாடினார், நரிவி விருத்தம் பாடினார், மருதப் பாட்டுப் பாடினார்; சிவபுராணம் பாடினார் நற்றி னைக்கோர் பழுதிலா உரையும் கண்டார். நாவணி தமிழ்ச்சொல் லோசை நயத்தொடு பாடஞ் சொல்லிப் பாவணி நயங்க ளோடு பாடிய பின்னத் துரார் பூவணி மடந்தை மாதர் புலவரைக் கலங்க விட்டே ஆவணித் திங்கள் தோன்றி ஆடியில் மறைந்து விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/215&oldid=926796" இலிருந்து மீள்விக்கப்பட்டது