பக்கம்:தேன்மழை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானியார் அடிகள் (1873 - 1942) கண்ணிரண்டும் கல்விக்கண் ஒன்றும் பெற்றுக் காலமெல்லாம் தமிழுக்கும் சைவத் திற்கும் தொண்டுசெய்தோர் பலராவர்; அவருள் காமச் சுவைவிலக்கிச் செயற்கைசுகம் விலக்கி வாழ்ந்த பண்டையநாள் சமணரைப்போல் செந்த மிழ்க்கும் பரஞ்சோதி முனிவரைப்போல் சைவத் திற்கும் எண்ணிறந்த பெருந்தொண்டு புரிந்து கீர்த்தி ஏந்தியவர் ஞானியார் அடிக ளாவார்! ஒரைந்து மொழியறிந்த புலியூர் ஞானி ஒய்வின்றிப் பெருஞ்சைவம் பேசி வந்தார். ஈரஞ்செய் கின்றதமிழ் மொழிநுட்பத்தை எழுத்தெழுத்தாய்ச் சொல்சொல்லாய் விளக்கி வந்தார் வீரஞ்செய் புறப்பொருளின் விளக்கம் ஆதி வேதாந்தம் சித்தாந்தம் இவற்றை யெல்லாம் காரஞ்செய் யாதகுரல் இனிமை யாலும் கனிந்தெழுந்த பேச்சாலும் பாய்ச்சி வந்தார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/217&oldid=926798" இலிருந்து மீள்விக்கப்பட்டது