உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதாவின் தேன்மழை

20


மாவும் பழுத்திருக்கும்

     மலரும் விழித்திருக்கும்

பூவின் மதுசுரக்கும்-கிளியே

     போவா ரடிவழுக்கும்!






பச்சை மயில்நடிக்கும்

     பன்றி கிழங்கெடுக்கும் 

நச்சர வங்கலங்கும்-கிளியே

     நரியெலாம் ஊளையிடும்.





கல்லுரல் போன்றமுகம்

    காட்டிடும் பன்றிகளை 

மெல்லிய மான்தடுக்கும்-கிளியே

    வேங்கைகள் வால்நிமிர்க்கும்.






அதிமது ரத்தழையை

     யானைகள் தின்றபடி 

புதுநடை போடுமடீ-கிளியே

      பூங்குயில் கூவூமடீ!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/22&oldid=495467" இலிருந்து மீள்விக்கப்பட்டது