பக்கம்:தேன்மழை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

                                                               காடு

காட்டின் சிறுநெருப்பு

    காந்தள் மலர்ச்சிரிப்பாம்! 

நாட்டின் பெருநெருப்பு-கிளியே

     நம்பிக்கை மோசமடீ!




இலைகள் உதிர்ந்தமரம்

      ஏந்தும் கிளைகளெல்லாம்

வலைநிழல் போன்றிருக்கும்-கிளியே

       வறுமை நிலைகுறிக்கும்.




சிங்கம் புலிகரடி

       சிறுத்தை விலங்கினங்கள்

எங்கும் திரியுமடீ-கிளியே

       இயற்கை விடுதியிலே!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/23&oldid=495465" இலிருந்து மீள்விக்கப்பட்டது