உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிர் இந்தவுடல் எப்போதும் நிலைப்ப தில்லை என்பதைநாம் எண்ணுகின்ற போதும் "நம்மைச் - சந்திக்கும் உலகத்தார் பெண்டு பிள்ளை தாய்தந்தை அனைவருமே ஒர்நாள் தீயில் வெந்தன்றோ போய்விடுவர்" எனநாம் எண்ணி விரித்தமுகம் சுருக்குகின்ற போதும் நெஞ்சில் உந்தியெழும் உணர்ச்சியெது? துன்பம் அன்றோ! ஓடிவரும் வெள்ளமெது? கண்ணிர் அன்றோ ! பிறக்கும்போ தழுகின்றோம். நமக்கே தேனும் பிணிவந்தால் அழுகின்றோம். பின்னர் இங்கே இறக்கும்போ தழுகின்றோம். நமது வாழ்வில் இன்னல்வரின் அழுகின்றோம், கவலை நெஞ்சை *றுக்கும்போ தழுகின்றோம். நம்மைச் சார்ந்தோர் அல்லலுரின் அழுகின்றோம். சிலபேர் நம்மை வெறுக்கும்போ தழுகின்றோம். வையத் தாரை விட்டதுண்டோ அவலமெனும் தீராத் துன்பம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/232&oldid=926813" இலிருந்து மீள்விக்கப்பட்டது