உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெருப்பில் நின்றவன் (பஃறொடை வெண்பா) மானொக்கும் வேல்விழியார் மாறனாம் கண்டியூர் சீனக்கன் மாண்டிறந்த தீச்செய்தி கேட்டவுடன் புண்ணறியா நெஞ்சத்தான் பொய்யா மொழிப்புலவன் கண்ணருவி செய்தே கலங்கியிடு காட்டிற்போய் வேகும் பிணத்தருகே வீழ்ந்தான் எழுந்திருந்தான். ஆகும் செயல்செய்தோன் அப்பிணத்தைப் நோக்கி அள்ளிக் கொடுத்தே அரியா சனத்தமிழைப் பிள்ளைபோற் காத்தே பிறைபோல் வளர்த்தோனே நீயிறந்து நானிருத்தல் நீதியோ? சித்திரச்செவ் வாயிறந்தால் நாவுக்கு வாழ்வுண்டோ!" என்றுரைத்துப் பொய்யா மொழிப்புலவன் பூரித்த செந்தீயில் நெய்போற் கலந்து நெருப்புக் கிரையானான். நிச்சயித்த நட்பில் நெருங்கியவன் அச்சாவின் உச்சி முனையேறி ஒன்றானான் கண்டீர்! பிறப்பொழுக்கம் குன்றாப் பெருங்கவிஞன் கண்ட இறப்பொழுக்கம் அன்றோ இது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/231&oldid=926812" இலிருந்து மீள்விக்கப்பட்டது