உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தித்திக்கும் தமிழிலே எடுப்பு தித்திக்கும் தமிழிலே முத்துமுத்தாய்ப் பாடல் தந்தவர் திருவள்ளுவர்-தேன்போலே (தித்திக்கும்) உடனெடுப்பு கத்தும் கடல்பிறந்த காலத்திலே பிறந்தும் கன்னிப் பருவத்தோடு காப்பியச் சிறப்போடு (தித்திக்கும்) அமைதி பஞ்சம் வராமலே பகைவள ராமலே பசியும் பிணியும் படர்ந்து விடாமலே நஞ்செனவே ஆட்சியை நம்ப விடாமலே நாடாள வேண்டுமென்று நயமாகச் சுயமாக (தித்திக்கும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/238&oldid=926819" இலிருந்து மீள்விக்கப்பட்டது