உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவிரியும் சோலை எடுப்பு பூவிரியும் சோலைக் காவிரி நதியே பொன்னியே கடல்தொடும் கன்னியே (பூவிரியும்) உடனெடுப்பு காவியப் புலவரெலாம் போற்றிய நதியே-என் கண்ணுக்கு நீயொரு தண்ணீர் வீதியே (பூவிரியும்) அமைதி மரங்களின் பாலே! மாந்தரின் துணையே-உன் மடியில் இருப்பது வளர்நுரை மணியே! விரிந்தபேர் பெற்றாய்மூ வேந்தரைப் போலே-எம் விளைவும் செல்வமும் தென்னாட்டில் உன்னாலே (பூவிரியும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/239&oldid=926820" இலிருந்து மீள்விக்கப்பட்டது