பக்கம்:தேன்மழை.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிக்கு வழி சரித்திரம் ஒவ்வோர் நாட்டின் தழும்பாகும் ; நாட்டை வாட்டும் தரித்திரம் பொருளாதாரத் தடுமாற்ற மாகும் ; கல்வி விருத்தியே நெஞ்சி ருட்டை விரட்டிடும் விளக்காம்; நூலின் கருத்தினை அறியான், நூலின் கனத்தையே அறிந்தோன் ஆவான் ! கற்பனை பெருக வேண்டின் கல்வியைப் பெருக்க வேண்டும். வெற்றியைப் பெருக்க வேண்டின் மேன்மேலும் முயல வேண்டும். அற்பமாய் முயன்றார் யாரும் அறிவினாற் பழுத்தா ரில்லை. கற்பூரத் தீயி னாலே கற்குளை வெந்தா போகும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/250&oldid=926831" இலிருந்து மீள்விக்கப்பட்டது