உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் மொழி ஆய்த வெழுத்தின் அமைப்பே அடுப்பாம் அடுப்பின் மீதிலோர் அழகிய பானை பானையின் மீது பழையதோர் அகப்பை அகப்பையின் மீதோ அழகியின் வலக்கரம் வலக்கரம் தன்னில் வண்ண வளையல் வலையலின் மீது மங்கையின் மலர்விழி அவள்விழி மீதினில் அன்னவன் விழிகள் விழிகளே காதலின் வெற்றிக்கு முதல்மொழி ! மூத்த உலகின் முதல்மொழி தமிழே! பூத்தசோன்லப் பூங்குயில் போன்றவள் சாயல், குறுந்தொகைத் தமிழே நாயகன் வாய்மொழி நற்றிணைத் தமிழே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/258&oldid=926839" இலிருந்து மீள்விக்கப்பட்டது