பக்கம்:தேன்மழை.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் பழந்தமிழ் கற்றல்இன்பம் பலநாடு சுற்றல் இன்பம் எழுந்திடு புதுமை தன்னை ஏற்றிடல் வாழ்வுக் கின்பம் குழந்தையின் தளிர்க்கை பட்ட கூழினை உண்ப தின்பம் இழந்ததைப் பெறுதல் இன்பம் இசைபட வாழ்தல் இன்பம். கற்றவர் முன்தாம் கற்ற கல்வியைக் கூறல் இன்பம் வெற்றியை வாழ்வில் சேர்க்கும் வினைபல புரிதல் இன்பம் சிற்றினக் கயவ ரோடு சேராது வாழ்தல் இன்பம் - பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/265&oldid=926846" இலிருந்து மீள்விக்கப்பட்டது