பக்கம்:தேன்மழை.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தளரா வளர்தெங்கு செடியும் கொடியும் செந்நெற் கதிரும் சுவைக்கதிர் வரகும் கரும்பும் சோளமும் தலையினால் காய்களைத் தருகின்ற தென்னையும் புறக்காழ் கொண்ட புல்லின மாகும். ஆயினும் தென்னைக் கமைந்தநல் லுறுதி கொம்பைத் தழுவும் கொடிகளுக் கில்லை. வண்ணக் கொடிகள் வளரும் தளரும் தடித்த தென்னையோ தளர்வ தில்லை. அதனை ஆராய்ந் தறிந்தநம் ஒளவையார் தளராது நீண்டு வளர்ந்த தென்னையைத் தளரா வளர்ந்தெங் கென்று பாடினார். தருநூல் நுட்பம் தெரிந்தா லன்றோ இவ்வாறு பாடுதற் கியலும் 1 எதையும் செவ்வையாயச் செய்திடத் திறமை வேண்டுமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/268&oldid=926849" இலிருந்து மீள்விக்கப்பட்டது