பக்கம்:தேன்மழை.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவில் குளிர்முகில் இழுத்திடும் குறுக்குக் கோடுகள் வானவில் ஆகும். அந்த வானில் நீர்முகில் அமைந்த நிறங்களின் நெருக்கம். அந்த நெருக்கம் அழகின் விளக்கம். கொடுமை செய்து கொல்லாத வில்லது. சேரனும் சோழனும் தென்திசை வேந்தனும் வல்வில் ஒரியும் வரலாற்று வீரரும் ஏந்திய வில்லோ எதிர்த்தோர் உயிரைக் குடித்து முடித்தவில் கொடிய கொலைவில்! உருவத்தில் இரண்டும் ஒன்றுபோ லிருப்பினும் செய்கையில் மன்னன்வில் தீமை புரியும் வான வில்லோ வம்பு செய்யாது. மாந்தர் எடுத்து வளைந்த வில்லின் செயலை ஆராய்ந்து தெளிந்தோர்; அவ்வில் கொடுமை செய்ததால் கொலைவில் என்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/269&oldid=926850" இலிருந்து மீள்விக்கப்பட்டது