உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269 நிலாமுகம் அழகிய முகமும் அளவு கருவியே ஆகும் என்பதை ஆராய்ந் தறிந்து முகந்தே அளக்கும் முகமெனும் உறுப்பை முகமெனக் கூறினர் முன்னாள் அறிஞர். ஆகவே முகமெனும் அழகிய சிறுசொல் வடமொழி யன்று; வாடாத தமிழே. வானத்து மதியோ வட்ட வடிவம் அந்த வட்டமோ அடிக்கடி தேயும். மங்கையர் முகமோ மலரைப் போன்றது மாம்பழப் பெண்களின் மதுச்சுவை முகமோ தேதி யறிந்து தேய்வதோ வளர்வதோ இல்லை என்பதை எல்லோரும் அறிவர். மங்கையர் முகத்தில் மணிவிழி உண்டு முத்துப் பற்களும் முக்கும் நாக்கும் பாவையர் முகத்தில் பார்க்கக் கூடும்! வெண்ணிலா முகத்தில் விழிகள் உண்டா? கனியிதழ் உண்டா? காதுகள் உண்டா? இல்லவே இல்லை என்பதை அறிவோம். இவ்வாறிருந்தும் இன்ப நிலாவை ஒருத்தியின் முகத்திற் கொப்பிடு வானேன்? காரணம் உண்டு கவனம் செலுத்துக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/272&oldid=926853" இலிருந்து மீள்விக்கப்பட்டது