உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலாமுகம் முதன்மை பெற்றதும் முன்புறம் உள்ளதும் சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தையும் அளக்க வல்லதும் அழகிய முகமாம். ஐந்துமலர் விளையும் அமுத நிலமே முத்தம் வழங்கும் முத்திரை மணிமுகம். முகத்திற்கு முகவுரை முதிரா நெற்றியே. தலைக்கு முகவுரை தாமரை முகமே. நிறுத்தி அளத்தல் நீட்டி அளத்தல் தெறிந்தே அளத்தல் தேங்கமுகந் தளத்தல் சார்த்தி யளத்தல் பெய்தே அளத்தல் எண்ணி எண்ணி அளத்தல் என்பதாய் அளவுகள் ஏழென ஆதிநூல் உரைக்கும் கூற்றுப் படிக்குக் குளிர்ந்த மலர்முகம் சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தையும் ஐம்பொறி கொண்டும் அளந்து காட்டலால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/271&oldid=926852" இலிருந்து மீள்விக்கப்பட்டது